
ராவண நடிகரின் கடவுளின் மதிப்புக்குரிய மகன் படம் பற்றி நடிகரும், இயக்குனரும் பரஸ்பரம் மேடையில் புகழ்ந்து கொண்டனர். இதில் மன வளர்ச்சி குன்றியவராக நடிக்கிறார் ராவணன்.
Wednesday, April 6th, 2011 at 19:08

முதலிரண்டை தவிர மற்ற எல்லாப் படங்களும் அதாவது இவர் ஹீரோவாக நடித்த எல்லாப் படங்களும் மண்ணைக் கவ்வின. நல்ல இயக்குனர் குஷியான கதை சொல்லி… இவருக்கு ஏன் ஹீரோ ஆசை என விசனப்படாத நல்ல உள்ளங்களே இல்லை.
Wednesday, April 6th, 2011 at 19:07

வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் யாருக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறார் ரஜினி. ஆனால் தற்போது நடந்திருக்கும் ஒரு திடீர் சந்திப்பு, ரஜினி தனது முடிவை மாற்றிக் கொண்டரா என எண்ண வைத்திருக்கிறது.
Wednesday, March 23rd, 2011 at 18:43

வருந்தி அழைத்தாலும் விழாவுக்கு வராதவர் அழகர்சாமியின் குதிரை படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விரும்பி வந்தார். தனது பால்ய கால பக்கத்து ஊர்காரரை இளையராஜா நினைவுகூர்ந்ததெல்லாம் சரிதான்.
Monday, March 21st, 2011 at 15:53

இரண்டு நாள் முன்பு குதிரை படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் இசையரசர். இவர்தான் இந்தப் படத்துக்கு இசை.
Saturday, March 19th, 2011 at 11:28

சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லி தன்னை அறிவுஜீவியாக்கிக் கொண்டதுடன் கட்சியிலும் களேபரப்படுத்தி வரும் கற்பு நடிகை பதற்றத்துடன் தலைமையின் அறிவிப்பை எதிர்நோக்கியிருக்கிறார்.
Friday, March 18th, 2011 at 06:46

பார்க்க சாதுவாக இருந்தாலும் உச்சத்தின் ஒல்லி மாப்பிள்ளை படுகெட்டி. முக்கியமாக ஹீரோயின் விஷயத்தில். நடிகைகளை இயக்குனர்தான் தேர்வு செய்வார் என்று பூனை போல் பேட்டிகளில் பதுங்கினாலும் உண்மையில் அந்த விஷயத்தில் மனிதர் புலி.
Sunday, March 13th, 2011 at 23:26

அந்த வாரிசு நடிகர் துடுக்குத்தனத்துக்கு பெயர் போனவர். அதைவிட பார்ட்டிக்கு பிரபலமானவர். அண்ணன் இயக்கும் படங்கள்தான் இவரது வேடந்தாங்கல். டுவிட்டரில் அவ்வப்போது கிண்டலும் கேலியுமாக சீரியஸான விஷயங்களை வாருவது வாரிசின் விளையாட்டு.
Friday, March 11th, 2011 at 17:05

இந்து மக்கள் கட்சி எதுக்கெல்லாம் போராட்டம் நடத்தும் என்பதை கவனிப்பதே சிலரது பொழுதுபோக்காகிவிட்டது. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. பைசா பிரயோஜனமில்லாத நடிகைகளின் விவகாரங்கள்தான் இந்த கட்சியின் போராட்ட களம்.
Friday, March 11th, 2011 at 17:04

தாடி இயக்குனர் அந்த வட இந்திய நடிகையுடன் சமீபத்தில்தான் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த நெருக்கத்தில் தான் இயக்கும் படத்திலும் நடிகையை ஹீரோயினாக்கினார். அந்த கட்டழகு பெண்தான் இப்போது பிரச்சனை.
Thursday, March 10th, 2011 at 01:57

விண்ணைத்தாண்டிய இயக்குனரின் படத்தில் நடிப்பதாக சொல்லிவிட்டு அல்டிமேட் நடிகர் ஒரு சுப்ரபாதத்தில் முடிவை மாற்றிக் கொண்டதும், கடுப்பான இயக்குனர் கிடைத்த சந்திலெல்லாம் அல்டிமேட்டை கிண்டிலேற்றியதும் நமக்கு தெரியும்.
Wednesday, March 9th, 2011 at 08:37

கவுண்ட பெல்லின் பாணியில் காமெடி செய்யும் அந்த இளம் சாண்டல்வுட் நடிகர் சமீபத்தில் சர்ச்சைக்குரிய சாமியாரை சந்தித்திருக்கிறார்.
Friday, March 4th, 2011 at 03:31

இளம் நடிகர் ஒருவர் தாத்தா இறந்த துக்கத்திலும் தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய விவகாரம் கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் உள்ளிட்ட இருபெரு தலைவர்களிடம் மேக்கப் மேனாக பல ஆண்டுகளா பணியாற்றியவர் பீதாம்பரம் கடந்த மாதம் 21ம்தேதி காலமானார்.
Friday, March 4th, 2011 at 03:28

இப்படியே போனால் நமக்கு கோபம் வராதா என கொந்தளிக்கிறார்கள் நிருபர்கள். என்ன விஷயம்? சமீபத்தில் தனது மகளுடன் விழா ஒன்றுக்கு வந்திருந்தார் முன்னாள் அமெரிக்க ரிடர்ன் நடிகை. மகள் நடித்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அது.
Thursday, February 24th, 2011 at 06:31

பூமி நாயகன் மசூதி இடிப்பு கதையை படமாக்க ஆசைப்பட்டதாகவும், சர்ச்சை வரும் என்பதால் அந்தத் திட்டத்தை கைவிட்டதாகவும் கூறியிருந்தார். தற்போதைய தகவல் அவர் தனது அடுத்தப் படத்தில் தீவிரவாதியாக நடிக்கிறாராம்.
Wednesday, February 16th, 2011 at 18:32

வாஜி வாஜி என்று சிவாஜியை அழைத்த நடிகை பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கும் போது முரண்டு பிடித்தாராம். இத்தனைக்கும் டூ பீஸ் என்றால் சிங்கிள் பீஸில் வந்து நிற்கும் தாராள மனசுக்காரர் அவர்.
Tuesday, February 15th, 2011 at 17:33

அசினை எந்தத் தமிழ்ப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடக்கிற விஷயங்கள் அந்த முழக்கத்துக்கு செவிசாய்க்கும் விதமாக இல்லை.
Tuesday, February 15th, 2011 at 17:30

சேனாதிபதிக்கு கிரகநிலை சரியில்லை. அவர் சும்மாவிருந்தாலும் தந்தைக்குலம் விடுவதாயில்லை.
Saturday, February 12th, 2011 at 10:20

ஆந்திராவின் பெரிய நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவரது வாரிசுக்கு தமன நடிகை காதல் வலை வீசி, அதில் வெற்றியும் கண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு தகவல்.
Wednesday, February 9th, 2011 at 17:10

கூலிங்கிளாஸ் இயக்குனரின் ஜப்பான் காப்பியை இணையத்தில் வறுத்தெடுத்துவிட்டார்கள். அவருக்கு பக்கபலமாக இருந்த எழுத்தாளரும் இப்போது பகைமை பாராட்டுவதால் கூலிங்கிளாஸ் மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment