WELCOME TO KPSELECTRONICS THIRUMAYAM CELL:9003608900 எங்களிடம் SUN DTH , DISHTV , AIRTEL ,TATA SKY , VIDEOCON DTH ,BIG TV போன்ற அனைத்து DTH களும் கிடைக்கும். vodafone , aircel , airtel , idia , bsnl , reliance , tata indicom , docomo , mts , uninor , vergin mobile ,videocon போன்ற அனைத்து MOBILE ரீசார்ஜ் மற்றும் SUN DTH , DISHTV , AIRTEL ,TATA SKY , VIDEOCON DTH ,BIG TV போன்ற அனைத்து DTH ரீசார்ஜ் களும் E-RECHARGE & கூப்பன் RECHARGE களும் கிடைக்கும்.WELCOME TO KPSELECTRONICS THIRUMAYAM CELL:9003608900

FLASH NEWS

NEWS
DISHTV To Register – sms – RMND to 57575Rs. 10,000 to Rs. 10 on EVERY ACTIVATION,      |      Sports Fiesta (ESPN, Star Sports, Star Cricket) – Now at Rs.40pm,Sports World (ESPN, Star Sports, Star Cricket, Ten Sports, Ten Action Plus) – Now at Rs. 55pm,New Offers      |      · 1290 – 3 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + Ten Cricketbsp;   · 1490 – 5 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + 3 Months Ten Cricket      |      சென்னையில் ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 10 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு மணிநேரம் மின்வெட்டு      |      டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு      |      2ஜி: விரைவில் 2-வது துணை குற்றப்பத்திரிகை தாக்கல்      |      புலிகள் மீதான தடையை நீக்குக: மதிமுக வழக்கறிஞர்கள் தீர்மானம்      |      டீசல், கேஸ் விலை உயர்வு: விஜயகாந்த் கண்டனம்      |      29-ம் தேதி முதல் 25, 50 பைசா நாணயங்கள் செல்லாது      |      · 1390 – 4 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + 3 Months Ten Cricket· 1590 – 6 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + 3 Months Ten CricketRs. 300 Reduced in 12 Months Offer!+Margin of Rs. 100 extra over & above your existing margins!(For Limited Period Only)· 2090 – 12 Months Silver Cricket + 3 Months Ten Cricket      |      நாகப்பட்டினத்தில் பஸ் ஓட்டுநர் தற்கொலை      |      விழுப்புரம் பகுதியில் நேற்று இரவு லேசான நிலஅதிர்வு      |      சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கனத்த மழை      |      கேஸ் ரூ.50, டீசல் ரூ.3, கெரசின் ரூ.2 விலை உயர்வு
Increase Speed Stop Decrease Speed

Search This Blog

Tuesday, August 16

Upcoming Tamil Channels list

Upcoming Tamil Channels list


1.Pudhiya Thalaimurai [Test] 
2.Thendral TV [Test] 
3.News Plus [test] [Coming Soon] 
4.Captain News 
5.Captain Music 
6.Jaya Comedy 
7.Jaya Kids 
8.Jaya News English 
9.E TV Tamil 
10.Asianet Tamil 
11.UTV Tamil 
12.Polimer Music 
13.Polimer Plus 
14.Kalaignar Murasu 
15.Krishna TV 
16.Sun TV HD 
17.KTV HD 
18.Sun Music HD
19.Sun Action 
20.Sun Life 
21.Sun R1 
22.Suriyan TV 
23.Zee Tamil News
24.boom TV tamil channel comingsoon! boom network..
25.CNN TAMIL- tamil news channel from indian Broadcast Network(IBN)





Boom channels


Boom Action - Action movies
Boom Comedy - Comedy movies and series
Boom Drama - Romantic & Drama movies and series
Boom Indian - Indian movies
Boom Music - Music channel
Boom Hop! - Channel for children
Boom Sport One - Sport channel
Boom Sport Two - Sport channel
Boom Sport Three - Sport channel
Boom Sport Four - Sport channel (Pay Per View)



yes
Posted: 15 Aug 2011 05:34 AM PDT



Puthiyathalaimurai tamil channel started date 24.08.2011

August 15th, 2011 | Tags:
ஆக 30-ல் அஜீத்தின் மங்காத்தா ஆட்டம் ஆரம்பம்! – வெங்கட் பிரபுஅஜீத்தின் பொன்விழா படமான மங்காத்தா வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தத் தகவலை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார். அஜீத், திரிஷா, அர்ஜுன், லட்சுமிராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கின்றனர்.
August 15th, 2011 | Tags:
ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் : நடிகர், நடிகையரின் சுதந்திர தின ஆசை!!நாட்டின் 65வது சுதந்திர தினத்தை‌யொட்டி, ஜனாதிபதி, பிரதமர், அந்ததந்த மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் தங்களது சுதந்திர தின செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளனர். அதுபோல் தமிழ் சினிமா நடிகர், நடிகையரும் தங்களது சுதந்திர தின செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
August 15th, 2011 | Tags:
அங்க கூப்பிட்டாங்க இங்க கூப்பிட்டாங்க அசின் பந்தா – தமிழ் சினிமாவுக்கே தண்ணி காட்டும் அசின்இந்தியிலும் சரி, தமிழிலும் சரி ஆசினுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கையில் படமில்லை என்ற போதிலும் அவரது பந்தா பேச்சுக்கு சற்றும் குறைச்சலைக் காணோம். தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்து வந்த ஆசின் திடீரென இந்திக்குக் கிளம்பிப் போனார். முதல் படமான கஜினி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், அவருக்கு இந்தியிலும் கதவு திறந்தது. தொடர்ந்து சல்மான் கானுடன் இரண்டு படங்களில் ஜோடி போட்டார். கூடவே கிசுகிசுக்களும் படையெடுத்துக் கிளம்பின.
August 15th, 2011 | Tags:
ராணா படப்பிடிப்பு தள்ளிப்போவது ஏன்? புதிய தகவல்கள்.!ரஜினிகாந்த் உடல்நிலை தேறிய பிறகும், `ராணா’ படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போவது ஏன்? என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் படம், `ராணா.’ இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார்.
August 15th, 2011 | Tags:
தற்கொலை வழக்கு: நடிகை நிலா பரபரப்பு வாக்குமூலம்.!குர்கான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ருச்சி தற்கொலை வழக்கு விசாரணையில் நடிகை நிலா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழில் ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிலா. அதன்பின் சில படங்களின் நடித்துள்ளார். இந்நிலையில் குர்கான் பகுதியைச் சேர்ந்த ருச்சி (28) என்பவரது தற்கொலை வழக்கில் நிலாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
August 15th, 2011 | Tags:
கஷ்டப்பட்டால் வெற்றி நிச்சயம் : கார்த்தி!!எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அதில் கஷ்டப்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். ஆர்.என்.ஆர்.மனோகர் இயக்கத்தில் நந்தா, பூர்ணா ஜோடியாக நடித்திருக்கும் “வேலூர் மாவட்டம்” படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டு இசை தகட்டை வெளியீட்டு பேசினார்.
August 15th, 2011 | Tags:
அனைவருக்கும் கல்வி… விஜய்யின் சுதந்திர தின ஆசைஅனைவருக்கும் கல்வி வசதி அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர், நடிகைகள் பலர் தங்களின் சுதந்திர தின ஆசைகளைத் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் கூறுகையில், “இந்தியாவில் நூறு சதவித மக்களும் கல்வி அறிவு பெற வேண்டும். இதன் மூலம் வேலையின்மை இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பது என் விருப்பம்.
August 15th, 2011 | Tags:
ரஜினி உடல் நலம் – சிங்கப்பூர் டாக்டர்கள் திருப்தி-பரிசோதனைக்குப் பின் ஷூட்டிங் திரும்புகிறார்சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பி ஒரு மாதம் ஓடிவிட்டது. இந்த நாட்களில் அவர் என்ன செய்கிறார், எப்போது வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார், ரசிகர்களைச் சந்திப்பார்? என்ற கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் அவருக்காக மொட்டையடித்தல், கிடா வெட்டு என நேர்த்திக் கடன் நிகழ்ச்சிகள் கனஜோராக நடந்து வருகின்றன.
August 15th, 2011 | Tags:
தலைநகரம் நாயகி ஜோதிர்மயி சினிமாவுக்கு குட்பை?நடிகை ஜோதிர்மயி ச்த்தமில்லாமல் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டதாக மாலிவுட்டில் பேசப்படுகிறது. தலைநகரம் மூலம் தமி்ழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் மலையாள நடிகை ஜோதிர்மயி. இதையடுத்து அவர் நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மொத்தம் 30 படங்களில் நடித்துள்ளார்.
August 15th, 2011 | Tags:
சென்னை அருகே எம்ஜிஆருக்கு ரசிகர்கள் கட்டிய கோயில் திறப்பு!புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என மக்களால் புகழப்பட்ட தலைவர் அமரர் எம்ஜிஆர். திரையுலகில் அவர் இருந்தவரை வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். அடுத்து அரசியலில் அடிவைத்த நாளிலிருந்து வெற்றிமேல் வெற்றி பெற்றார். இறுதி மூச்சு வரை, யாராலும் அசைக்க முடியாத தன்னிகரில்லாத தலைவராகத் திகழ்ந்தார் எம்ஜிஆர்.
August 15th, 2011 | Tags:
புலிவேஷத்துக்கு யு / ஏ சான்றிதழ் தந்த சென்சார்!பி வாசு இயக்கத்தில் ஆர்கே நடிக்கும் புலிவேஷம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. எல்லாம் அவன் செயல், அழகர் மலை போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் ஆர்கே. கதாநாயகனாக வெற்றி பெற்ற போதும், நல்ல வேடம் என்பதால் பாலாவின் அவன் இவனில் வில்லனாக நடித்தார். அவரது வேடம் பெரிதும் பேசப்பட்டது.
August 15th, 2011 | Tags:
எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க : மம்தா மோகன்தாஸ் தகவல்!!எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன், என்று நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். “சிவப்பதிகாரம்” படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். கேரளாவை சேர்ந்த இவர், மாதவனுடன் “குரு என் ஆளு” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் சிலபல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அம்மணிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.
August 15th, 2011 | Tags:
சூட்டிங் ஸ்பாட்டில் மனைவியுடன் காணாமல் போன ஹீரோ…!டி.வி., நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி விஜய் டி.வி.,யில் ஒளிப்பரப்பான காதலிக்க நேரமில்லை தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரஜின். இப்போது சுற்றுலா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்பபடத்தின் சூட்டிங் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்களாகவே நடந்து வருகிறது. சூட்டிங்கிற்கு நடிகர் பிரஜன் தனது மனைவி சான்ட்ரா ஜோஸ் வந்திருந்தார்.
August 15th, 2011 | Tags:
பிரசன்னா சேரன் முரண் !சேரன், பிரசன்னா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘முரண்’. இப்படத்தினை நடிகர் சேரன் தயாரித்து இருக்கிறார். யு.டிவி இப்படத்தினை வெளியிட இருக்கிறது. இப்படம் STRANGERS ON A TRAIN என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்று கூறி வருகிறார்கள் தமிழ் திரையுலகில். அவர்கள் கூறியபடி படத்தின் கதை :
August 15th, 2011 | Tags:
இஷ்டத்துக்கு நடிக்கிறார் நிஷா அகர்வால்!‘ஏமண்டி ஈ வேலா’ என்ற தெலுங்கு படம் தமிழில் ‘இஷ்டம்’ என்ற பெயரில் விமல் நடிக்க ரீமேக்காகிறது. இதன் தெலுங்கு படத்தில் நடித்த நிஷா அகர்வால் தமிழிலும் நடிக்க இருக்கிறார். இவர் காஜல் அகர்வாலின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
August 14th, 2011 | Tags:
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் – மனம் திறக்கின்றார் முருகதாஸ்”140 நாட்கள் ஷூட்டிங்… நீங்க கற்பனையே பண்ண முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கிட்டோம். அர்த்தம் உள்ள பிரமாண்டம்னு சொல்லலாம். உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். ‘ஏழாம் அறிவு’ படத்தின் ஸ்பெஷல் என்னன்னா, இதில் பீரியட் ஃபிலிமையும் சயின்ஸ் ஃபிக்ஷனையும் கலந்து இருக்கேன்.
August 14th, 2011 | Tags:
‘7ஆம் அறிவு’ படத்தில் சூர்யாவிற்கு எத்தனை வேடங்கள்? – லேட்டஸ்ட் தகவல்!ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘7ஆம் அறிவு’. இப்படத்தில் நாயகனாக சூர்யாவும், நாயகியாக ஸ்ருதி ஹாசனும் (கமலஹாசனின் மகள்) நடிக்கிறார்கள். இப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்று முன்பு வந்த தகவலில் உண்மை இல்லை. இன்று கிடைத்துள்ள தகவலின் படி சூர்யா எத்தனை வேடங்களில் நடிக்கிறார் தெரியுமா?
August 14th, 2011 | Tags:
உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்“உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகைகள் சொல்வதைத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இங்கே ஒரு நடிகர் இந்த வசனத்தை சொன்னது மட்டுமின்றி, இதனால் படப்பிடிப்பையே நிறுத்தி வைத்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்புங்கள்.
August 14th, 2011 | Tags:
என்னுடன் இமயமலைக்கு எந்த ஒரு நடிகையும் வரவில்லை: விஷால்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போல நடிகர் விஷாலும் ஆண்டிற்கு இமயமலைக்கு செல்வாராம். ஒவ்வொரு முறையும் தனியாக இமய மலைக்கு செல்லும் விஷால், அங்கே குறைந்தது ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு வருவாராம். ஆனால் இந்த முறை அவர் தனியே செல்லாமல், ஒரு நடிகையுடன் இமயமலைக்கு சென்றாராம்.
August 14th, 2011 | Tags:
செப்டம்பருக்கு தள்ளிப்போன ‘மங்காத்தா’வின் ரிலீஸ் தேதி!அஜித்குமார் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மங்காத்தா’ இந்தமாதம் 20-ம் தேதி திரைக்கு வரும் என்று, இப்படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி முன்பு தெரிவித்திருந்த்தை செய்தியாக்கி இருந்தோம். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி செப்டம்பரில்தான் ‘மங்காத்தா’ ரிலீஸ் செய்யப்படுமாம்.





நடிகர்கள்
ஜீவா, ஸ்ரேயா, கௌரி, சத்யன், ஜெயப்பிரகாஷ், பிரகாஷ்ராஜ், கணேஷ் ஆச்சார்யா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஸ்ரீநாத்
இசை
பிரகாஷ் நிக்கி
இயக்கம்
கோகுல்
தயாரிப்பு
ஆர்.பி. சௌத்ரி
பிறருக்கு துன்பமெனில் ‘ரௌத்திரம்’ பழகுவதில் தவறில்லை என்ற மையக்கருத்தை கருவாக வைத்து உருவான கதை.

சென்னை சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரேயா. ஸ்ரேயாவின் தோழியிடம் சில்மிஷம் செய்துவிடுகிறான் சட்டக்கல்லூரியில் படிக்கும் ரௌடி ஒருவன். கல்லூரி முதல்வரிடமும், போலீஸ் அஸிஸ்டண்ட் கமிஷ்னரான தன் தந்தையிடமும் புகார் தெரிவிக்கிறார் ஸ்ரேயா. அவன் பிரபல ரௌடி ‘கௌரி’க்கு வேண்டப்பட்டவன் என்பதால் நடவடிக்கையெடுக்கத் தயங்குகிறார்கள். கலங்கிப் போகும் இருவரும் சாலைக்கு வருகிறார்கள். சில்மிஷம் செய்தவன் சாலையில் அடிபட்டு வந்துவிழுகிறான்…. ஜீவா நடுரோட்டில் அவன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப் புரட்டியெடுக்கிறார். காரணம்.. ஜீவா பயணித்த ஷேர் ஆட்டோ விபத்திற்குள்ளாவது சட்டக்கல்லூரி ரௌடி மற்றும் அவனது கூட்டத்தினரால். ஜீவாவின் கோபத்தைப் பார்த்து காதல் கொள்கிறார் ஸ்ரேயா.
ஜீவாவைப் பழிவாங்க நேரம் பார்த்திருக்கும் ரௌடிகள், ஜெயிலில் இருக்கும் கௌரி வெளியே வரட்டும் என்று காத்திருக்கிறார்கள். பால்ய காலத்தில் தாத்தா பிரகாஷ்ராஜிடம் பெற்ற பயிற்சியால் சாலையில் நடக்கும் குற்றங்களைத் ‘தட்டி’க்கேட்கும் ஜீவா, ஒரு கட்டத்தில் ஜெயிலில் இருந்து வெளியேறி வரும் பிரபல ரௌடி கௌரியைக் காயப்படுத்தி விடுகிறார். கௌரி குழுவினரின் கொலைமுயற்சி, ஜீவாவின் குடும்பம், காதல் அனைத்தும் ஜீவாவின் கோபத்திற்கு முன்பு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள்!!
படத்தில் உண்மையான ஹீரோ யாரென்றால் அது அனல் அரசுதான். அருமையாய் கோரியோகிராப் செய்யப்பட்ட சண்டைக்காட்சிகள். நிஜமாகவே இன்னவோட்டிவ் அண்ட் இண்ட்ரஸ்டிங். சண்டைக் காட்சிகளை எக்ஸிக்யூட் செய்த விதத்தில் அசத்தல். அதற்கு பிறகுதான் எல்லோரும். குறையாய் சொல்லப் போனால் சில இடங்களில் அந்த ஸ்லோமோஷன் ஆக்ஷன் சீன்கள் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. ஆரம்பக் காட்சியில் ஐந்து நிமிடமே வரும் பிரகாஷ்ராஜ் எபிசோட் அட்டகாசம். அதற்கு காரணம் பிரகாஷ்ராஜின் பாடி லேங்குவேஜும், அதை படமாக்கிய விதமும் நம்ப வைக்கிறது.
ஜீவாவிற்கு ‘சத்யா’ போல ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை வேண்டுமானால் நிறைவேறியிருக்கலாம். ஆரம்ப காட்சிகளுக்கு அப்புறம் ஒரு கீறல்கூட படாமல் தொடர்ந்து எல்லாரையும் பந்தாடிக் கொண்டேயிருப்பதை நம்ப முடியவில்லை. அதற்கான பாடி லேங்குவேஜும், நடிப்பும் குறையே. ஆக்ஷன் ஹீரோ வரிசையில் சேர்க்க வேண்டிய தகுதிகளை இப்படத்தில் காட்டியிருக்கிறார். வழக்கமாய் கலகலவென பேசியே பார்த்த ஜீவா இதில் கொஞ்சம் பேசாத ஜீவாவாக போரடிக்கவே செய்கிறார். தொடர்ந்து இவரை கொல்ல முயல்வதே ஒரு கதையாய் போனவுடன் ஆரம்பித்த சுறுசுறுப்பு சுர்ரென இறங்கிவிடுகிறது.
ஸ்ரேயாவுக்கு கொடுத்த காசுக்கு உருப்படியான கேரக்டர். வழக்கமாய் வரும் லூசுப் பெண் ஹீரோயின் கேரக்டர் போலில்லாம கொஞ்சம் யோசிக்கும்படியான கேரக்டரை கொடுத்த இயக்குநருக்கு ஒரு பெரிய கும்பிடே போடலாம். ஸ்ரேயா, ஜீவாவின் காதலியாக வருகிறார். “நாங்க தனியா இருக்கும் போதுகூட அவன் என்னை கிஸ் பண்ணினது இல்ல, காதலர் தினத்தன்னிக்கு பார்வர்ட் மெஸேஜ்கூட அனுப்பினதில்ல. இதே மாதிரிதான் என்னை தவிர அவன் வேற எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டான். அதான் என் சிவா” என ஜீவாவிற்கு தன் தோழியிடம் நற்சான்றிதழ் தரும் காட்சியில் ஸ்ரேயா அழகோ அழகு. தோழிக்காக தன் தந்தையிடம் கெஞ்சுவதும், கோபத்தால் சீறுவதும், நன்றாகவே நடித்திருக்கிறார். ஜீவா-ஸ்ரேயா காதல் காட்சிகள் சுவாரஸ்யம்.
கிட்டுவாக வரும் அந்த மகாகுண்டு கணேஷ் ஆச்சார்யா, கவுன்சிலர், கௌரியின் அல்லக்கை, இன்னொரு லோக்கல் அல்லக்கை ரவுடியாக வரும் இயக்குநர் கோகுல், பக்கா லோக்கல் பாஷை பேசும் எம்.எல்.ஏ என்று ஏகப்பட்ட கேரக்டர்கள். எல்லா கேரக்டர்களும் வரும் போது பெரிய பில்டப்போடு தான் வருகிறார்கள் முடியும் போது பொசுக், பொசுக்கென வீழ்ந்துவிடுகிறார்கள்.
பக்கத்துக் குப்பத்தின் தாதாவாக பாலிவுட் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா. ஒரு பாடலில் மாறுபட்ட நடனம் மூலம் அசத்தியிருக்கிறார். ‘இன்னா பெரியா பயிப்பாநீ…’ என்று பொல்லாதவனில் மிரட்டும் சுருட்டைமுடி நடிகர்தான் பிரதான ரௌடி ‘கௌரி’.
ஜீவாவின் பெற்றோர்களாக வரும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது பங்கை சிறப்பாகச் செய்திருக்கின்றனர். ஜீவாவிற்கும் அவரது தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷிற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நம் வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை காட்டுகின்றன. ஸ்ரீநாத், சத்யன் ஆகிய இருவரும் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் கோகுல், முதல் படத்திற்கு நல்ல அவுட்புட்தான் என்றாலும் திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது பாதியில் அப்படியே தொங்கிப் போய் சரிடா இப்ப அவனை கொல்லப் போறீங்களா? இல்லியான்னு புலம்ப வைத்துவிடுகிற அளவுக்கு டிராகிங்காக போனதுதான் பெரிய மைனஸ். குடும்ப சம்மந்தப்பட்ட காட்சிகளில் கிடைக்கும் சுவாரஸ்யம் பின் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் இல்லாம போய்விடுகிறது. கௌரி.. கௌரி என்று ஆளாளுக்கு சொல்லும் போது நடு முதுகில் சில்லென ஏற வேண்டும் என்கிற அளவுக்கு முதல் பாதியில் பில்டப் செய்தவர்கள். அதற்கான கரெக்டான காஸ்டிங்கை செய்திருந்தால் இன்னும் ஏறியிருக்கும் சூடு.
இயக்குநரைப் போன்றே ஒளிப்பதிவாளர் என்.ஷண்முக சுந்திரத்திற்கும் அறிமுகப் படம் இது. பிரகாஷ்ராஜின் சண்டை, வில்லன் கௌரியை அறிமுகப்படுத்தும் காட்சி, இரவில் நடக்கும் சண்டைக் காட்சிகள், ஸ்ரேயாவும், ஜீவாவும் பாலத்தில் நடந்து வரும் காட்சி என்று பல காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு நம்மை மிரள வைக்கிறது. ஜீவா, ஸ்ரேயா காதல் காட்சிகளை கவிதை போல படம்பிடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் இவரது கேமராவும் பம்பரமாய் சுழன்றிருக்கிறது. கண்டிப்பாக இவர் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் இடம்பிடிப்பார் எனலாம்.
இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கிக்கும் இது முதல் படம். படத்திற்கு பாடல்கள் பலம் சேர்க்கவில்லை. இன்னும் அதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ‘மாலை மங்கும் நேரம்’ பாடல் மட்டும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதன் குணதேவாவின் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
குட்டி குட்டியாய் நிறைய வேலைகளை இயக்குநர் செய்திருக்கிறார். கௌரியின் ஆட்கள், அந்த கவுன்சிலர், எம்.எல்.ஏ, எதிர் கோஷ்டி கிட்டு, அவனது ஆட்கள், இவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்கள் எல்லாம் படு நேச்சுரல். படம் ஆரம்பித்ததிலிருந்து ஏகப்பட்ட வில்லன்களை காட்டியதில் எவனோடு தான் ஜீவாவுக்கு பிரச்சினை என்று மழுங்கி போகும் அளவிற்கு ஒரே வில்லன் கோஷ்டியாய் இருப்பது ஒரு மைனஸே






நடிகர்கள்: ஆர் சிவம், ஹரிணி, சடகோபன் ரமேஷ், உமர், மயில்சாமி, அவதார் கணேஷ்
இசை: அருள்தேவ்
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்
தயாரிப்பு: வி முரளிராமன்
இயக்கம்: யுவ்ராஜ்
லகான், சென்னை 28 என கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வெற்றி கண்ட படங்களின் பாதிப்பில் வந்துள்ள படம் போட்டா போட்டி.
உப்பார்பட்டியில் கொடைவாணன் (சிவம்), கொலைவாணன் (உமர்) என இரண்டு பங்காளிகள். இருவரும் கீரியும் பாம்பும்போல. கொடைவாணன் ‘பாடி ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்’ ரகம். தமாஷ் பேர்வழி. கொலைவாணன் பெயருக்கு ஏற்ற மாதிரியே கொலை செய்யவும் தயங்காத ஆசாமி.
இந்த இருவருக்குமே ஆசை, மாமன் மகள் ரஞ்சிதத்தை (ஹரிணி) அடைவதுதான். ஆனால் அவளுக்கோ இந்த இருவரையுமே பிடிக்கவில்லை. ஒரு நாள் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு பெண் கேட்டுப் போகிறார்கள் மாமன் வீட்டுக்கு.
இந்த சிக்கலை சமாளிக்க, ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தி அதில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்குதான் ரஞ்சிதம் என ஊர் முடிவு பண்ணுகிறது. ஆனால் இருவருக்குமே கிரிக்கெட் அரிச்சுவடி கூட தெரியாது. எனவே ஆளுக்கு ஒரு கோச்சை அழைத்து வர முடிவு செய்கிறார்கள்.
இதில் கொடைவாணன் அணி சடகோபன் ரமேஷை கடத்தி வருகிறது. கொலைவாணன் அணி டுபாக்கூர் கோச் மயில்சாமியை மடக்கிப் பிடித்து வருகிறது.
கோச்சிங் என்ற பெயரில் ஏகப்பட்ட தமாஷ் நடக்கிறது. இதற்கிடையே, போட்டிக்கு காரணமான ரஞ்சிதா, கொடை- கொலைவாணன்களை விட்டுவிட்டு, சடகோபன் ரமேஷை லவ்வுகிறார். இறுதியில் யாருக்கு அவர் கிடைத்தார் என்பதை ஒரு முழு கிரிக்கெட் போட்டியை நடத்தி சொல்கிறார்கள்.
இடையில் அலயன்ஸ் என்ற நிறுவனத்தினர் அங்குள்ள கிரானைட் மலை ஒன்றை விலைபேச வருகிறார்கள். இவர்களிடமிருந்து மலையைக் காக்கப் போராடுகிறது கொடைவாணன் குழு.
லகான் பாதிப்புதான் படம் என்றாலும், அதை தமிழ் கிராமத்துக்கேற்ப மாற்றியிருக்கிறார் இயக்குநர். ஆனால் பட்டிதொட்டியெல்லாம் நீக்கமற உப்பார்பட்டியில் ஒருவருக்கு கூட தெரியாமல் போனதைத்தான் நம்ப முடியவில்லை!
அதேபோல தேவையே இல்லாமல் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அவாள்’ அரசியல் உள்குத்தை ஏற்க முடியவில்லை. தேசிய கிரிக்கெட்டில்தான் இந்த நிலை என்றால், சினிமாவில், அதுவும் ஒரு கிராமத்தில் நடப்பதாக வரும் கிரிக்கெட்டில் கூடவா… அட போங்கப்பா!
இயக்குநர் – இணை தயாரிப்பாளர் என்பதற்காக, இப்படியெல்லாம் தேவையே இல்லாமல் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு பயமுறுத்தலாமா யுவராஜ்?
காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் தட்டிக் கொண்டு போகும் கேரக்டர் சடகோபன் ரமேஷுக்கு. ஆனால் கிரிக்கெட்டை கோட்டைவிட்ட மாதிரியே நடிப்பிலும் அவர் அவுட். அவர் வசனம் பேசும்போது எரிச்சலாக உள்ளது. நல்ல வேளை, பாட்டு, டான்ஸ், பைட் என படுத்தாமல் விட்டார்(கள்)!
கொடைவாணனாக வரும் சிவம் கலக்கியிருக்கிறார். இந்த மண்ணின் மைந்தர்களை பிரதிபலிக்கும் முகம், தோற்றம், அல்டாப்பு குணம் என அப்படியே உப்பார்பட்டி ஆளாகவே மாறியிருக்கிறார்.
இவருக்கு எடுப்பாக வரும் அவதார் கணேஷ், ‘ராசுக்குட்டி’யில் வரும் செம்புலியை நினைவூட்டுகிறார். மயில்சாமி இருக்க கலகலப்புக்கு பஞ்சமிருக்குமா… கோச் என்ற பெயரில் இவர் அடிக்கும் லூட்டி சரியான காமெடி.
நாயகி ஹரிணி ஓகே.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் அசல் கிராமத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால் அருள்தேவின் இசை படத்தில் ஒன்ற விடாமல் தடுக்கிறது.
கடைசி காட்சி வரை படத்தை கலகலப்பாக கொண்டுபோன வரையில் இயக்குநருக்கு வெற்றிதான். வசனங்களில் புத்திசாலித்தனமும் கிராமத்து குறும்பும் கொப்பளிக்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு ஒரு முழு 50 ஓவர் மாட்ச் பார்த்த மாதிரி மகா இழுவை!
மற்றபடி… இரண்டரை மணி நேரத்தைக் கொல்ல சரியான படம்தான்!

பன்னி மேய்க்கிற ஒரு வில்லனுக்கும், ‘தண்ணி’ விற்கிற ஹீரோவுக்கும் இடையே மோதல். நடுவில் ஒரு அழகான பெண். மிச்ச கதையை ரசிகர்களே புரிந்து கொள்ளலாம். ஆனால், எடுத்துக்கொண்ட கதையைவிட, அதன் திரைக்கதையை ரசிக்கும்படி சொல்லியிருப்பதால் புதுமுக இயக்குனர் ஞானத்திற்கு ஒரு ஞானப்பழத்தையே கிஃப்ட் பண்ணலாம்.

ஊருக்கே அடங்காத ஒரு ரவுடி, ஒருகாலத்தில் நன்றாக படிக்கக் கூடியவன் என்ற பிளாஷ்பேக் படத்தின் பிற்பகுதியில்தான் வருகிறது என்றாலும், வில்லனுக்கும் ஹீரோவுக்கும் பகை எங்கிருந்து துவங்கியது? எப்போது மோதப் போகிறார்கள் என்ற ஆவலை து£ண்டியிருக்கிறார்கள்.
தன்னைவிட நன்றாக படிக்கும் கணக்கு பிள்ளையின் மகனை தனது அப்பாவே அடிக்கடி பாராட்டுவதும், இருவரையும் சேர்த்து ஒப்புமைப்படுத்தி பார்ப்பதையும் பொறுக்க முடியாத மகன் சொந்த அப்பாவையே போட்டு தள்ளுகிறான். பழி அந்த படிக்கிற மாணவன் மீது விழுகிறது. குடும்பமே சிதறிப் போக ஜெயிலில் இருந்து திரும்பும் மாணவன், கொன்றவனிடமே கூலியாக இருக்கிறான். தொழில் சாராயம் விற்பது. இந்த பிளாஷ்பேக்கெல்லாம் அறிந்த ஹீரோயின், கதாநாயகனை வெறுக்கிறாள். கடைசியில் அவன் மனம் திருந்தி அவளை காதலிக்கிறான். காதலிக்கவும் வைக்கிறான். அந்த நேரத்தில்தானா வில்லனுக்கு கல்யாண ஆசை வரவேண்டும்? சொந்த அக்கா மகளான ஹீரோயினை விரட்டி வர, வில்லனும் ஹீரோவும் கட்டி உருள்கிறார்கள். கடைசியில் ஹீரோயின் யாருக்கு என்பது அந்த போஸ்டரை தின்னும் மாட்டுக்கே கூட புரிந்த ரகசியம்தான்.
அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை ஹரிக்குமார். மெல்ல நடக்கிறார். மெலிதாக சிரிக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டும் சுறுசுறுப்பாக ஹீரோயினை வளைக்கிறார். சண்டை காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டுகிறார். காதலை சொல்கிற நேரத்தில் மட்டும் காக்காய் வலிப்பு வர, நம்மை அதிர வைக்கிறார். அந்த சமயத்தில் ஒரு பதற்றம் கூட இல்லை கதாநாயகி ஜானவி முகத்தில். அது ஏன் என்பது நல்ல திருப்பம்.
அருந்ததியிடம் பொங்கி வழிகிறது அழகு. நடிப்புக்கும் பாஸ் மார்க் கொடுக்கலாம். ‘முரட்டு மச்சான்’ பாடலில் இவரது அசைவுகள் ஸ்கூல் குழந்தைகளை பார்ப்பது போன்ற குது£கலத்தை வரவழைக்கிறது.
படத்தில் மிரட்டோ மிரட்டென்று மிரட்டுவது பன்னி மேய்க்கிற அந்த வில்லன் சாய்ரவிதான். இவர் வருகிற காட்சிகள் எல்லாம் அடிவயிற்றில் பந்து சுழல்கிறது. (தியேட்டர் பக்கம் போயிராதீங்க பிரதர்)
தனது மனைவியை காப்பாற்றுவதற்காக நண்பனின் தம்பியை காட்டிக் கொடுக்கும் சூரி, கடைசியில் தற்கொலை செய்து கொள்கிற காட்சி மனசை ரம்பம் போட்டு அறுக்கிறது. அதை தவிர மற்ற காட்சிகளில் எல்லாம் அவர் போடுகிற ரம்பம் வேறு ரகம்!
இசை-ஜான்பீட்டர். குத்துப்பாடல்கள் போக எஞ்சியிருக்கிற ஒரே ஒரு மெலடியான ‘முரட்டு மச்சான்…’ பாடலை மட்டும் திரும்ப திரும்ப கேட்கலாம்.
போடிநாயக்கனு£ரை ‘போடி’ என்பார்கள் சுருக்கமாக! இனிமேல் ‘போகாதடி’ என்பார்களோ என்னவோ?

நடிப்பு – விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா
பாடல்கள் – நா முத்துக்குமார்
இசை – ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு – நீரவ்ஷா
எடிட்டிங் – ஆண்டனி
தயாரிப்பு – எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து – இயக்கம் – விஜய்
கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்…
-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.
ஹாட்ஸ் ஆஃப் விஜய்… . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
‘ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.
மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.
மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.
வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.
தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள்ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச் சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. காரணம், கதையின் நாயகன்.
மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, ‘இனிப்பு இனிப்பாக இருக்கிறது’ என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!
இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!
அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.
குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.
நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!
ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக்கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.
விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.
படத்தின் மைனஸ் என்று பார்த்தால்…. காட்சிகள் மெதுவாக நகர்வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந்திருப்பது ‘எ பிலிம் பை விஜய்’ என்ற எழுத்துக்கள் ஒளிரும்போதுதான்.
அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.
கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்!
‘குஷி’ மூடில் இயக்கியிருக்கிறார் ஸ்ரீராம் பத்மநாபன். அதுவும் கு- பாதி, ஷி- பாதியாக பிரித்து மேய்ந்திருக்கிறார் காதல் இலக்கணத்தை. ஈகோவால் மோதிக்கொள்வதும், அடுத்த காட்சியிலேயே ஈஷிக்கொண்டு திரிவதுமாக ரசிகர்களை ஈர்க்கிறது அந்த காதல் ஜோடி. பிரிவும் சந்திப்புமாக தொடரும் காதலில் இறுதி வரை எலாஸ்டிக் டென்ஷனை கிளப்புகிறார் இயக்குனர். ஆஹா…

எதையெடுத்தாலும் ஒரே விலை என்கிற மாதிரி, எதற்கெடுத்தாலும் ஒரே முடிவு… சண்டைதான்! சஞ்சய்-நட்சத்திரா ஜோடியின் இந்த கோபம் ஒரு கட்டத்தில் பிரிவை ஏற்படுத்த, நடுவில் வருகிறாள் இன்னொருத்தி. இந்த பைபாசில் காதல் ரூட் மாறுகிறதா, அல்லது சுற்றி வளைத்து பழைய ரூட்டிலேயே பயணிக்கிறதா என்பது க்ளைமாக்ஸ்.
ரிஜிஸ்தர் ஆபிசில் பணியாற்றும் அரசு அதிகாரியாக காட்டி விடுவதால், சஞ்சயின் மெச்சூரியான முகம் உறுத்தவில்லை. சட்டென்று மூக்கில் கோபம் உட்கார்ந்து கொள்ள, நட்சத்திராவிடம் முறைத்துக் கொள்கிற காட்சிகள் எல்லாமே லைவ்வாக இருக்கிறது. ஆசை ஆசையாக இவர் நாய்க்குட்டியை பரிசளிக்க, அவரோ அய்யே… என்று ஒதுங்கிக் கொள்வதும், அதே நட்சத்திரா பின்பு நாய் வளர்க்க ட்ரை பண்ணுவதுமாக ரசனையை அள்ளி இறைத்திருக்கிறார்கள் படம் முழுக்க. சண்டை காட்சிகளில் சஞ்சய் காட்டுகிற ஆக்ரோஷத்தை பார்த்தால், ஆக்ஷன் ஹீரோ நாற்காலிக்கு ஆர்டர் கொடுக்கலாம் போலிருக்கிறது.
நட்சத்திரா மட்டும் என்னவாம்? சஞ்சய்க்கு மூக்கில் கோபம் என்றால், இவருக்குள் செ.மீ கொள்ளாமல் பரவிக்கிடக்கிறது கோபமும் அலட்டலும். மனம் இரங்கி பல நாள் கழித்து தன்னை பார்க்க வரும் சஞ்சயிடம் கொஞ்சம் கூட மனம் இரங்காமல் விரட்டி அடிக்கிற காட்சி அதிர்ச்சி. நகைச்சுவையும் நளினமாக வருகிறது நட்சத்திராவுக்கு. கிச்சனுக்குள் வந்து “இதுதான் கிச்சனா?” என்று ஊர்வசியை அதிர்ச்சியூட்டுகிறாரே, தியேட்டர் கலகலக்கிறது.
மற்றொரு நாயகியாக வருகிறார் சங்கீதா பட். அமைதியே உருவான முகம். அன்பே உருவான பார்வை. பேசாமல் முடிச்சை மாத்தி போடேன்யா… என்று சஞ்சயிடம் கெஞ்சலாம் போலிருக்கிறது. படத்திற்கு இவரது என்ட்ரி முற்றிலும் வித்தியாசம். எதிர்பாரததும் கூட.
எந்நேரமும் மென்று கொண்டேயிருக்கும் ஒரு சிறுவனை காட்டுகிறார்கள். காமெடிக்காகவாம். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார் தம்பி. எவ்வளவு பிரமாதமான நகைச்சுவை நடிகர்? ஆனால் வீணாக்கியிருக்கிறார்கள் மயில்சாமியை. லொள்ளு சபா ஜீவா இருக்கிறார். பட்….
நல்லவேளை, ஜெகன் இருப்பதால் சில சீன்கள் கலகல…
டி.ராஜேந்தரின் குரல் வளத்திற்கு முன்னால் எவ்வளவு ஆட்டம்தான் போடுவது? ஆட்டக்காரர் சீனாவை பெண்டு நிமிர்த்துகிறது அவரது குரலும், அபிஷேக்-லாரன்சின் இசையும். தம்ம விட்டுடு மச்சான், சரக்க விட்டுடு மச்சான் என்ற இந்த பாடல் பலே உற்சாகம் பாஸ§…
இந்த படம் பார்த்துவிட்டு எத்தனை காதல் புட்டுக்குமோ, அல்லது ஒட்டிக்குமோ? எல்லா புகழும் டூ வுக்கே!

கிளப்புகிறார் இயக்குனர். ஆஹா…

எதையெடுத்தாலும் ஒரே விலை என்கிற மாதிரி, எதற்கெடுத்தாலும் ஒரே முடிவு… சண்டைதான்! சஞ்சய்-நட்சத்திரா ஜோடியின் இந்த கோபம் ஒரு கட்டத்தில் பிரிவை



ஏற்படுத்த, நடுவில் வருகிறாள் இன்னொருத்தி. இந்த
பைபாசில் காதல் ரூட் மாறுகிறதா, அல்லது சுற்றி வளைத்து பழைய ரூட்டிலேயே பயணிக்கிறதா என்பது க்ளைமாக்ஸ்.
ரிஜிஸ்தர் ஆபிசில் பணியாற்றும் அரசு அதிகாரியாக காட்டி விடுவதால், சஞ்சயின் மெச்சூரியான முகம் உறுத்தவில்லை. சட்டென்று மூக்கில் கோபம் உட்கார்ந்து கொள்ள, நட்சத்திராவிடம் முறைத்துக் கொள்கிற காட்சிகள் எல்லாமே லைவ்வாக இருக்கிறது. ஆசை ஆசையாக இவர் நாய்க்குட்டியை பரிசளிக்க, அவரோ அய்யே… என்று ஒதுங்கிக் கொள்வதும், அதே நட்சத்திரா பின்பு நாய் வளர்க்க ட்ரை பண்ணுவதுமாக ரசனையை அள்ளி இறைத்திருக்கிறார்கள் படம் முழுக்க. சண்டை காட்சிகளில் சஞ்சய் காட்டுகிற ஆக்ரோஷத்தை பார்த்தால், ஆக்ஷன் ஹீரோ நாற்காலிக்கு ஆர்டர் கொடுக்கலாம் போலிருக்கிறது.
நட்சத்திரா மட்டும் என்னவாம்? சஞ்சய்க்கு மூக்கில் கோபம் என்றால், இவருக்குள் செ.மீ கொள்ளாமல் பரவிக்கிடக்கிறது கோபமும் அலட்டலும். மனம் இரங்கி பல நாள் கழித்து தன்னை பார்க்க வரும் சஞ்சயிடம் கொஞ்சம் கூட மனம் இரங்காமல் விரட்டி அடிக்கிற காட்சி அதிர்ச்சி. நகைச்சுவையும் நளினமாக வருகிறது நட்சத்திராவுக்கு. கிச்சனுக்குள் வந்து “இதுதான் கிச்சனா?” என்று ஊர்வசியை அதிர்ச்சியூட்டுகிறாரே, தியேட்டர் கலகலக்கிறது.
மற்றொரு நாயகியாக வருகிறார் சங்கீதா பட். அமைதியே உருவான முகம். அன்பே உருவான பார்வை. பேசாமல் முடிச்சை மாத்தி போடேன்யா… என்று சஞ்சயிடம் கெஞ்சலாம் போலிருக்கிறது. படத்திற்கு இவரது என்ட்ரி முற்றிலும் வித்தியாசம். எதிர்பாரததும் கூட.
எந்நேரமும் மென்று கொண்டேயிருக்கும் ஒரு சிறுவனை காட்டுகிறார்கள். காமெடிக்காகவாம். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார் தம்பி. எவ்வளவு பிரமாதமான நகைச்சுவை நடிகர்? ஆனால் வீணாக்கியிருக்கிறார்கள் மயில்சாமியை. லொள்ளு சபா ஜீவா இருக்கிறார். பட்….
நல்லவேளை, ஜெகன் இருப்பதால் சில சீன்கள் கலகல…
டி.ராஜேந்தரின் குரல் வளத்திற்கு முன்னால் எவ்வளவு ஆட்டம்தான் போடுவது? ஆட்டக்காரர் சீனாவை பெண்டு நிமிர்த்துகிறது அவரது குரலும், அபிஷேக்-லாரன்சின் இசையும். தம்ம விட்டுடு மச்சான், சரக்க விட்டுடு மச்சான் என்ற இந்த பாடல் பலே உற்சாகம் பாஸ§…
இந்த படம் பார்த்துவிட்டு எத்தனை காதல் புட்டுக்குமோ, அல்லது ஒட்டிக்குமோ? எல்லா புகழும் டூ வுக்கே!

No comments:

Post a Comment

Live Cricket Scores